உண்மை தெரியாமல் உளறுகிறார் ரஜினி! உதயநிதி ஸ்டாலின்

சென்னை:

ஜினிகாந்த் உண்மை தெரியாமல் பேசுகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.

கடந்த 13ந்தேதி நடைபெற்ற துக்ளக் பொன்விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், முரசொலி குறித்தும், பெரியார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலை யில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தனது கருத்து குறித்து மன்னிப்பு கேட்க முடியாது, பெரியார் குறித்து ஏற்கனவே வெளியான தகவலைத்தான் தெரிவித்தேன் என்று கூறினார்.

ரஜினியின் கருத்து மீண்டும் சர்ச்சையாக்கப்பட்டு வரும் நிலையில், ரஜினி யோசித்து பேச வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரை கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஸ்டாலின் மகனும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், ‘ரஜினி உண்மை தெரியாமல் பேசுகிறார்,  உண்மை தெரிந்ததும் மன்னிப்பு கேட்பார் என்று கூறினார்.

ஏற்கனவே காவிரி விவகாரத்தில் உண்மை தெரிந்ததும், கர்நாடகாவில் மன்னிப்பு கோரினார் என்று ரஜினியின் நிலை குறித்தும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.

கார்ட்டூன் கேலரி