உதயநிதிக்கு ஜோடியாகிறார் அனு இம்மானுவேல்….!

லாக்டவுன் காரணமாக சில மாதங்களுக்கு முன் தொடங்க இருந்த மகிழ்திருமேனியின் படம் தள்ளிப் போனது. இப்போது ஊரடங்கு முடிந்ததும் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

இந்த படத்தில் உதயநிதி ஹீரோவாக நடிக்கிறார் . இந்தப் படம் சமூகத்துக்குத் தேவையான கதையை கொண்ட படம் என்றும் வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்டது என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதில் உதயநிதிக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க இருக்கிறார். இவர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

இந்தப் படத்துக்கு அரோல் கரோலி இசை அமைக்கிறார்.