Random image

சீனு ராமசாமியின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!

டிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தை சீனு ராமசாமி இயக்க இருக்கறார்.

தற்போது உதயநிதி பிரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.  மலையாளப் படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

மலையாளத்தில் பகத் பாசில் நடித்த கேரக்டரில், தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.

இதற்கிடையே  உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில், அடுத்த படம் இயக்குநர் சீனு ராமசாமியுடன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தின் படப்பிடிப்பு  ஜனவரி 19 -ம் தேதி ஆரம்பமாகும் எனவும்  தெரிவித்துள்ளார்.

You may have missed