பிறந்த நாள் கொண்டாடும் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய், இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள் திரையுலகினர் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .

இந்நிலையில் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விஜய்யின் 46-வது பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார் .

“நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்… என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் செல்வாக்கு திரையுலக அந்தஸ்து அனைத்தையும் மீறி இந்த அளவுக்கு விஜய்க்கு வாழ்த்து மடல் எழுதியிருக்கும் ஒரு மனித நேயமிக்க தலைவனை உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .