சென்னை: நம் பிள்ளைகள் பாசாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு, இன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 238 தேர்வு மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந் நிலையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நம் பிள்ளைகள் பாசாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம் என்று தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தமது டுவிட்டரில் கூறி இருப்பதாவது: 2 மணி தேர்வுக்குக் காலை 11-க்கே வந்துவிட வேண்டும். மதிய உணவு இல்லை. தமிழ் அறிவிப்பு இல்லை. கையுறைகூட குறிப்பிட்ட நிறத்தில், வெயிலில் பெற்றோர்-கழிப்பறை வசதியில்லை. நம் பிள்ளைகள் பாஸாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே இன்றைய நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம் என்று பதிவிட்டுள்ளார்.