மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சைக்கோ. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி, இயக்குநர் ராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகக் கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தின் சக்ஸஸ் மீட்டில் உதயநிதி ஸ்டாலின்எனக்கு மிஷ்கின் சார் படத்தில் நடிக்க ஆசை. அதே போல், கதையும் நல்ல கதை என்றேன். இந்தப் படத்தில் ராஜின் உழைப்பைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை. என்னை விட ரொம்ப கடுமையாக உழைத்திருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றிக்காக மிஷ்கின் சாருக்கு ரொம்பவே கடமைப்பட்டு இருக்கேன். கண்டிப்பாக ‘சைக்கோ 2’ நடக்கும் என நம்புகிறேன்” என்று பேசினார் உதயநிதி ஸ்டாலின்.