‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் சென்னை உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்….!

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை.

வரும் ஆகஸ்ட் 8ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. பாலிவுட்டில் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் வந்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கா இப்படம் உருவாகியுள்ளது..

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போனி கபூர் தயாரித்துள்ளார்.

வரும் 8ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு ஒரு சில தியேட்டர்களில் தற்போதே முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது .

இந்நிலையில் மூன்று பிரபல நிறுவனங்கள் சேர்ந்து உரிமையை வாங்கியிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . சென்னை பகுதியின் ரிலீஸ் உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது . மேலும் சேலம், திருச்சி பகுதிகளின் உரிமையையும் அவர் வாங்கியுள்ளார். இதனை உதயநிதி அதிகாரபூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி