’உடுக்கை’ பட இயக்குனர் திடீர் மரணம்.. நடிகை சஞ்சனா சிங் இரங்கல்..

டிகைகள் அங்கிதா, சஞ்சனா சிங், மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படம் ’உடுக்கை’. புதுமுக இயக்குனராக பாலா மிர்தன் டைரக்டு செய்துள்ளார்.


இயக்குனர் பாலாமிர்தம் நேற்று திடீர் பக்க வாத நோயால் பதிக்கப்பட்டார். அவரை குடும்பத்தினர் சென்னை யில் உள்ள மருத்து வமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். சஞ்சனா சிங். அங்கிதா போன்றவர்கள் நடிக்கும் உடுக்கை படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணி நடந்து வருகிறது.
இறந்த பாலாமிர்தனிற்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மரணம் குறித்து சஞ்சனா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ உடுக்கை பட இயக்குனர் பாலாமிர்தன் இள வயதிலேயே இறந்திருக்கிறார். அவர் இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்’என தெரிவித்திருக்கிறார்.