உடுமலை கௌசல்யா இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி குன்னூர் வெலிஙன் கண்டோன்மெண்ட் கிளார்க் பணியில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளர்.

kausalya

சாதிமறுப்பு திருமணம் செய்துக் கொண்ட சங்கர் மற்றும் கௌசல்யா தம்பதியினர் மீது 2016ம் ஆண்டு உறவினர்கள் பட்டபகலில் அறிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சங்கர் உயிரிழந்தார். படுகாயமடைந்த கௌசல்யா தீவிர சிகிச்சைக்கு பிறகு ஆவணப்படுகொலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். காதல் திருமணம் செய்துக் கொண்ட கௌசல்யா தனது கணவரை இழந்ததால் அவருக்கு குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் கிளாா்க் பணி வழங்கப்பட்டது.

சமீபத்தில் நிமிர்வு கலையகத்தின் பொறுபாளரான சக்தியை கௌசல்யா மறுமணம் செய்துக் கொண்டார். கௌசல்யாவின் இந்த திருமணத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்த சிலையில் ஒருசில எதிர்ப்பும் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, கௌசல்யா மறுமணம் செய்த சக்தி குறித்து சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துக்கள் பரப்பப்பட்டன.

இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கௌசல்யா, இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாகம் கிளாா்க் பணியில் இருந்து கௌசல்யாவை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.