உகாண்டா: சாலை விபத்தில் 48 பேர் பலி

கம்பாலா:

உகாண்டா நாட்டின் வடக்கு கிர்யாடோங்கோ என்ற பகுதியில் இரவு நேரத்தில் பஸ் ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே விளக்கு இல்லாமல் வந்த டிராக்டர் ஒன்று பேருந்து மீது மோதியது.

தொடர்ந்து பின்னால் பீர் பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி மீதும் பஸ் மோதியது. இதில் 16 குழந்தைகள் உட்பட 48 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.