டெல்லி: நாடு முழுவதும் உரிய அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் போலியான 24 பல்கலைக்கழகங்களின் பெயர்களை பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்திற்கு புறம்பாகவும், அங்கீகாரம் பெறாமலும் இந்த 24 பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. அவற்றில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 8 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன.
அதற்கு அடுத்து டெல்லியில் 7 பல்கலைக்கழகங்கள், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 2 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரியில் தலா ஒரு போலி பல்கலைக்கழகம் உள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது.
இந்த தகவலை வெளியிட்டுள்ள யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின், இது வரை அப்பல்கலைக்கழகங்கள் எந்த சான்றிதழ்களையும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.