இறுதியாண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யலாம்: மத்திய அரசுக்கு யுஜிசி பரிந்துரை

டெல்லி: நாடு முழுவதும் இறுதியாண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கு யுஜிசி பரிந்துரை செய்துள்ளது.

கொரோனோ பரவல் காரணமாக 3 மாதங்களுக்கு மேல் நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அரியானா பல்கலைக்கழக துணைவேந்தர் குஹத் தலைமையில் தற்போதைய நிலையில் தேர்வுகளை நடத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு தமதுபரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. அதில் என்ன விவரங்கள் உள்ளன என்பது பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன.

அந்த பரிந்துரையில் அதில் நாடு முழுவதும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஆந்திரா, ஹரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed