தலைநகரில் துணிகரம் : வெளிநாட்டு தூதரிடம் மொபைல் திருட்டு !

டில்லி

க்ரைன் நாட்டு தூதரிடம் டில்லி செங்கோட்டையில் மொபைலை பறித்துக் கொண்டு ஒரு திருடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் தூதராக கடந்த ஆண்டு முதல் டில்லியில் பணி புரிபவர் இகோர் பொலிகா.  இவர் டில்லி நகரில் உள்ள புகழ்பெற்ற செங்கோட்டைக்கு கடந்த புதன்கிழமை சென்றுள்ளார்.  அவர் மட்டும் தனியாக செங்கோட்டையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்.  செங்கோட்டையில் பல செல்ஃபிக்கள் எடுத்துள்ளார்.

அப்போது காலை 9.15 மணி.  பல செல்ஃபிக்கள் எடுத்த பின் மொபைலை கையில் வைத்துக் கொண்டு அவர் மீண்டும் ஒரு செல்ஃபி எடுக்க முனைந்துள்ளார்.  அப்போது அங்கு எங்கிருந்தோ வந்த மர்ம நபர் அவர் கையில் இருந்த மொபைலை பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டார்.   இது குறித்து அவர் உள்துறை அமைச்சகத்துக்கும், டில்லி போலீஸ் கமிஷனருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

டில்லி போலீஸ் கமிஷனர் திருடனை கண்டுபிடிக்க ஒரு தனிப்படை அமைத்துள்ளதாகவும் விரைவில் கண்டுபிடித்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.