பெய்ஜிங்:

சீனா சிறையில் இருந்து இஸ்லாமிய உய்குர் கைதிகள் 20 பேர் தப்பி சென்றுள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு சீனாவின் சிறுபான்மை இனமான இஸ்லாமிய உய்குர் இனத்தை சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் தாய் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டிருந்த 20 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து சாங்கியா மாகாண குடியேற்ற அதிகாரிகள் கூறுகையில், ‘‘சிறை சுவர்களில் உடைந்த டைல்ஸ்களை பயன்படுத்தி ஓட்டை போட்டு 25 பேர் தப்பிச் சென்றனர். மலேசியா எல்லையில் உள்ள சிறை சுவரை ஒட்டியுள்ள முள்கம்பி வேலியை போர்வை பயன்படுத்தி ஏறி தப்பிச் சென்றுள்ளனர். இதில் 5 பேர் பிடிபட்டுள்ளனர்’’ என்றனர்.

சில ஆண்டுகளாக சின்ஜியாங் மாகாணத்தில் இருந்து நூற்றுகணக்கான இஸ்லாமிய உய்குர் இனத்தினர் அரசின் ஒடுக்குமுறையால் வெளியேறி வருகின்றனர். இதை மறுத்துள்ள சீனா, அவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று அழைத்து வருகிறது.

சிறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கைதிகள் தப்பிச் சென்றபோது கடுமையான மழை பொழிவு இருந்தது. இதனால் அவர்கள் தப்பிச் சென்ற சத்தம் கேட்காமல் போய்விட்டது. எல்லையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

பல இஸ்லாமிய உய்குர் மக்கள் தென் கிழக்கு ஆசியாவில் துர்கிக்கு தப்பிச் சென்றுள்ளனர். இந்த வகையில் கடந்த 2015ம் ஆண்டு ஜூலையில் 100 உய்குர் மக்களை தாய்லாந்து மீண்டும் சீனாவில் ஒப்படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.