‘உஜாலா’ திட்டத்தின் மூலம் பீகாரில் 1 கோடி எல்இடி பல்புகள் விற்பனை!

பீகார்,

மின்சார சேமிப்புக்காக  பீகாரில் மலிவு விலையில் 1 கோடி எல்இடி பல்புகள் விற்பனை செய்ய்பபட்டு வருகிறது.

மத்திய அரசின்  ‘உஜாலா’ திட்டத்தின் மூலம் பீகாரில் குறைந்த விலையில் எல்இடி பல்புகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.,

பீகாரில், மின்சாரத்தை சேமிக்கும் 1 கோடிக்கும் மேற்பட்ட எல்இடி மின்விளக்குகள் மலிவு வி லையில் பொதுமக்களிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

“மலிவு விலை எல்இடி பல்புகள் மூலம் உன்னத வாழ்வு’ (உஜாலா) என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது.

நாட்டில் மின்சார தட்டுப்பாடு நிலவுவதை தொடர்ந்து, பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு,   மின்சார சிக்கனத்தை வழங்கக்கூடிய “எல்இடி’ விளக்குகளை பொதுமக்கள் பயன்படுத்து வதை ஊக்குவிப்பதற்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டத்தின்படி, மத்திய அரசுக்குச் சொந்தமான “எனர்ஜி எஃபிஷியன்ஸி சர்வீஸஸ்’ (இஇஎஸ்எல்) நிறுவனம் “எல்இடி’ விளக்குகளைத் தயாரித்து மாநில அரசு  மூலம் மலிவு விலையில் வினியோகித்து வருகிறது.

பீகார் மாநிலத்தில் இந்த மின்விளக்குகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரூ.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.