பிரிட்டனில் உயரும் பாதிப்பு: மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு

லண்டன்:
பிரிட்டனில், கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளதால், பிரதமர் போரிஸ் ஜான்சன், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன் , நம் நாட்டில், தினசரி கொரோனா வைரஸ் பாதிப்புகள், கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகின்றன என்றும், இதனால், வரும், 5ம் தேதி முதல், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன என்றும் அவர் கூறினார். இந்த கட்டுப்பாடுகள், நான்கு வார காலத்திற்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்த போரிச் ஜாக்சன், நான்கு வாரம் முடிந்த பின், அப்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப, கட்டுப்பாடுகளை மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.