பிரிட்டன்: ஹிட்லரின் பெயரை தனது குழந்தைக்கு சூட்டியதால் தம்பதியினர் சிறையில் அடைப்பு!

சர்வதிகாரி ஹிட்லரின் பெயரை தனது குழந்தைக்கு சூட்டியதால் அந்த தம்பதியருக்கு சிறைத்தண்டனை வழங்கிய சம்பவம் பிரிட்டனில் நடந்துள்ளது.

chid

பிரிட்டனில் உள்ள பேன்பரி நகரத்தை சேர்ந்தவர்கள் ஆடம் தாமஸ் மற்றும் கிளவுடியா. இவர்கள் தங்களுக்கு பிறந்த குழந்தையின் பெயருக்கு நடுவில் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லரின் பெயரை சேர்த்து சூட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, நாஜி தத்துவங்களை செயல்படுத்தவும் இருவரும் முயன்றுள்ளனர்.

இதனால் அந்த தம்பதியினர் மீது விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. தாமஸ் மற்ரும் கிளவுடியா தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்களாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இருவரின் குற்றமும் நிரூபிக்கப்பட்டது.

இந்நிலையில், தாமஸ்க்கு ஆறு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கிளவுடியாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. தம்பதிகள் இருவருக்கும் வன்முறையை தூண்டும் விதமாக இனவெறி குறித்த நம்பிக்கைகள் இருந்ததாக வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்தார்.