மனு தள்ளுபடி: இந்தியா கொண்டு வரப்படுகிறார் விஜய்மல்லையா…

விஜய் மல்லையா நாடு கடத்துவதை  எதிர்த்து, அவர் தாக்கல் செய்த மனுவை லன்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக, விஜய்மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது உறுதியாகி உள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பிடம் சுமார் 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு இங்கிலாந்து தப்பிச் சென்றார். அங்கு குடியுரிமை பெற்று வசித்து வருகிறார் பிரபல இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையா. அவரை  இந்தியாவுக்கு அழைத்து மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவரை  நாடு கடத்தக்கோரி இங்கிலாந்து அரசிடம் இந்தியா கோரிக்கை வைத்தது.

இது தொடர்பான வழக்கு லண்டனிலுள்ள  வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே  அவரை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது . ஜாமின் பெற்று இங்கிலாந்தில் வசித்து வருகிறார் விஜய் மல்லையா.

நாடு கடத்துவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து விஜய்மல்லையா தரப்பில்  மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது கடந்த சில மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று லன்டன் நீதிமன்றம், விஜய்மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதன் காரணமாக, விஜய்மல்லையா விரைவில் நாடு கடத்தப்படுவார் என்று தெரிகிறது.