லன்டன்:

ங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்து வரும் இந்திய தொழிலதிபர் நிரவ் மோடியை, நாடு கடத்தும் வழக்கில், அவரது காவலை  மே மாதம் 24-ம் தேதி வரை நீட்டித்து பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மாமா மெகுல் சோக்‌ஷி ஆகியோர், பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில்பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்குக் கடன் வாங்கிவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற நீரவ் மோடி, லண்டனில் தஞ்சம் புகுந்தார். அங்கு தலைமறைவாக வசித்து வருகிறார்.

இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, ஸ்காட்லாந்து யார்டு காவல் துறையினர் நீரவ் மோடியைக் கடந்த மார்ச் மாதம்  19-ம் தேதி கைது செய்தனர். பின்னர்,  அங்குள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் நீதிமன்றக் காவலில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை இந்திய அரசு எடுத்து வருகிறது.  இந்த நிலையில், அவரது நீதிமன்றக் காவல் நிறைவடைந்ததையொட்டி, அதை நீட்டிப்பது தொடர்பான விசாரணை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்மா ஆர்பத்நாட் முன் நடைபெற்றது.

அப்போது, சிறையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக நீரவ் மோடியிடம் விசாரணை நடைபெற்றது. அவரது ஜாமினை நிராகரித்த நீதிபதி, அவரது  நீதிமன்றக் காவலை மே மாதம் 24-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், வழக்கின் விரிவான விசாரணை மே 30-ஆம் தேதி நடைபெறும். அப்போது, நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.