நீரவ் மோடியின் ஜாமீன் மனு 3வது முறையாக மீண்டும் நிராகரிப்பு..!

ண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியின் ஜாமீன் மனு 3வது முறையா  மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மாமா மெகுல் சோக்‌ஷி ஆகியோர், பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி தலைமறைவாகினர். அவர்கள்மீது  14 ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நீரவ் மோடியை லண்டன் காவல் துறையினர் கடந்த மார்ச் 19ம் தேதி கைது செய்தனர். இவருக்கு ஜாமின் வழங்கினால் ஆதாரங்களை கலைத்து விடுவார் என இந்தியா தரப்பில் முறையிடப் பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு தொடர்ந்து 3 முறை ஜாமின் மறுக்கப்பட்டது.

3 ஆவது முறையாக ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த போதும், ஜாமின் வழங்க மறுத்த லண்டன் நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Nirav Modi, UK court
-=-