இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்ட கொரோனா ட்ரேசிங் செயலி செயலிழந்துள்ளது

லண்டன்:
ங்கிலாந்தில் கூகுள் ஆப்பிள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, குறைந்தது 19 மில்லியன் மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட கொரோனா வைரஸை கண்டறியும் செயலி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அருகில் இருந்த போதும் எச்சரிக்க தவறிவிட்டதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருந்தால் எச்சரிக்கும்படி செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டது, அந்த செயலி தற்போது வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அருகில் இருந்தும் எந்த ஒரு எச்சரிக்கையும் செய்யவில்லை எனவும், ஆயிரக்கணக்கானோர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு எச்சரிக்கை கொடுக்கவும் தவறிவிட்டது என தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த போதும், அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள செயலி எச்சரிக்காததால் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உடல்நலம் மற்றும் சமூக பராமரிப்புக்கான செய்தி தொடர்பாளர், இதைப்பற்றி தெரிவித்துள்ளதாவது: கூகுள் ஆப்பிள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உலகின் ஒரே செயலி இதுவாகும், ஆனால் இதில் ஏற்பட்ட சில பிழையால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் ஆயிரக்கணக்கானவர்கள் இருந்தபோதிலும், அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

செப்டம்பர் 24 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடக்கப்பட்ட இந்த செயலியானது, கூகுள் மற்றும் ஆப்பிளின் ப்ளூடூத் லோ எனர்ஜி அடிப்படையிலான அமைப்பை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி சரியாக வேலை செய்ததாகவே இதுவரை நாங்கள் கருதினோம், ஆனால் தற்போது திடீரென்று கடந்த வாரம் அதிர்ச்சியூட்டும் வகையில் குறைந்த எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட பொழுது மட்டுமே இந்த செயலியில் பிழை உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் இந்த செயலியை பயன்படுத்திய பயனர்கள் குறைந்தது 15 நிமிடம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரின் பக்கத்தில் இருந்தால் மட்டுமே இது எச்சரிக்கை அனுப்பியுள்ளது என்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கடந்து செல்லும் பொழுது, அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள எச்சரிக்கை செய்யாததால், தற்போது இந்த செயலியில் பிழை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு நாங்கள் அதனை சரி செய்ய முயற்சித்து வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.