லண்டன்:

பாலியல் வன்புனர்வு மற்றும் பாலியல் வன்முறைக் காட்சிகள் இடம்பெற்ற திரைப்படங்களை பார்ப்பதற்கு 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடை விதிக்கும் வகையில், புதிய விதிமுறையை பிரிட்டிஷ் திரைப்பட மதிப்பீட்டுத் துறை அமல்படுத்தியுள்ளது.


இது குறித்து பிரிட்டிஷ் திரைப்பட மதிப்பீட்டு வாரியத் தலைவர் டேவிட் அஸ்டீன் கூறியதாவது:

2008-ம் ஆண்டு வெளியான கெய்ரா நைட்லீஸ் திரைப்படத்தில் பாலியல் உணர்வைத் தூண்டும் காட்சிகள் இடம் பெற்றன. இதனையடுத்து, 12 மற்றும் அதற்கு குறைவான வயதினர்  இது போன்ற திரைப்படங்களைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.

தற்போது, பாலியல் வன்புனர்வு மற்றும் பாலியல் வன்முறைக் காட்சிகள் இடம்பெறும் திரைப்படங்கள் பெருமளவு வருவதால், 15 மற்றும் அதற்குக் குறைவானோர், இது போன்ற படங்களைப் பார்ப்பதற்கு தடைவிதித்து புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. பாலியல் சமுதாயம் மற்றும் ஆபாச சமுதாயம் குறித்து அவர்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர்.

பாலியல் வன்புனர்வு மற்றும் பாலியல் வன்முறை இடம்பெற்றுள்ள படங்களை, வீட்டிலிருந்து இணையம் வழியாக 15 வயதுக்கு குறைவானவர்கள் பார்ப்பதை எப்படி கட்டுப்படுத்துவது என ஏராளமானோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கும் தீர்வு ஏற்படுத்தும் வகையில் 2019-ம் ஆண்டு எங்களது பணி இருக்கும். பாலியல் வன்புனர்வு மற்றும் பாலியல் வன்முறைக் காட்சிகள் இடம் பெற்ற திரைப்படங்களை, 15 மற்றும் அதற்கும் குறைவான வயதினர் பார்க்க தடை விதிக்கும் விதிமுறை, பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றார்.