லண்டன்: பிரிட்டனில் ஊழியர்களின் ஊதியத்தில் 80 சதவீதத்தை அரசு வழங்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் அறிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் நிலையில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்யாமல் வைத்திருந்தால் அவர்களின் சம்பளத்தில் 80% வரை அரசு மானியங்களை வழங்கும். அதிகபட்சமாக 2500 டாலர்கள் வரை இது இருக்கும் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: தேசிய அளவில் இதை ஒரு பெரிய முயற்சியாக கொண்டு உள்ளோம். ஒரு தலைமுறையை வரையறுக்கும் தருணத்தில் நாம் ஒரு கூட்டு தேசிய முயற்சியை மேற்கொண்டோம்.
நாம் ஒன்றாக நிற்போம். இப்போது வரலாற்றில் நமது திறன்களால் தீர்மானிக்கப்படுவோம். மக்களின் ஊதியத்தை வழங்குவதற்கு கிடைக்கும் நிதிக்கு வரம்பு இருக்காது என்றார். சுயதொழில் செய்பவர்களும் நிவாரணம் கேட்டனர். அவர்களுக்கும் பணம் செலுத்த அரசு ஒப்புக்கொண்டது.
பிரிட்டன் அரசானது, 80% சம்பளம் அல்லது 2500 டாலர்களை செலுத்துகிறது. வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்கும், முக்கியமாக சேவைத் துறை ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.