ண்டிகர்

விஜய் மல்லையா விவகாரத்தில் இங்கிலாந்து அரசால் ஒன்றும் செய்ய இயலாது என இங்கிலாந்து தூதர் ஆண்ட்ரூ அயார் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்திய தொழில் அதிபரான விஜய் மல்லையா சுமார் ரூ. 9000 கோடி வரை வங்கிகளில் கடன் வாங்கி திருப்பித் தராததால் அவர் மீது இந்தியாவில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.   அவர் அதனால் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார்.  அங்கு அவரை ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் கைது செய்தனர்.  அதன் பின் அவர் 650000 பவுண்டு செலுத்தி ஜாமீனில் வந்துள்ளார்.   அவரை இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இங்கிலாந்து தூதர் ஆண்ட்ரு அயார் சண்டிகர் வந்துள்ளார்.   அவரிடம் மல்லையா விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.  அதற்கு அவர், “இந்த விவகாரத்தில் இங்கிலாந்து அரசு எதுவும் செய்ய முடியாது.   இது சட்ட பூர்வமான வழக்கு.   நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.  அதனால் அரசோ அரசியல் வாதிகளோ இதில் தலையிட முடியாது.   அரசால் சட்டம்  இயற்றவும் மாற்றவும் மட்டுமே உரிமை உண்டு.

நீதிமன்றம் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கும் அரசும் வேறு வேறானது.    யாரும் அடைக்கலம் கோரி ஒரு நாட்டுக்கு வரும் போது அவர்களை நிராகரிக்க முடியாது.    வட கொரியா நாட்டில் இருந்து ஒருவர் அடைக்கலம் கோரி வந்தாலும் அவரை திருப்பி அனுப்ப சட்டத்தில்  இடம் இல்லை.” என தெரிவித்துள்ளார்.