Random image

குஜராத் முதலீட்டாளர்கள் மாநாடு : இங்கிலாந்து கலந்துக் கொள்ளவில்லை

கமதாபாத்

குஜராத் மாநில முதலீட்டாளர்கள் மாநாட்டில் போதுமான அளவு வர்த்தகம் நடைபெறாததால் அதில் கல்ந்துக் கொள்ளப் போவதில்லை என இங்கிலாந்து அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் குஜராத் மாநிலத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம்.   இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் நாட்டினர் இந்தியாவில் வர்த்தக முதலீடுகள் செய்வது வழக்கமாகும்.   இதை ஒட்டி மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் கலந்துக் கொள்ளும் கண்காட்சியும் நடைபெறுவது வழக்கமாகும்.

இதுவரை இந்த வர்த்தக மாநாட்டில் பங்குதார நாடாக பல நாடுகள் கலந்துக் கொண்டுள்ளன.   அந்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும்.   ஆனால் இந்த வருடம் இங்கிலாந்து பங்களிப்பு நாடாக கலந்துக் கொள்ள மறுத்துள்ளது.   அது மட்டுமின்றி கண்காட்சியிலும் கலந்துக் கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ள்ளது.

இங்கிலாந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2015 மற்றும் 17 ஆம் ஆண்டு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்குதார நாடாக இங்கிலாந்து இருந்தது.  இந்திலாந்தில் இருந்து இதற்காக 50000 பவுண்டுகள் வரை செலவு செய்ததுடன் எங்கள் நாட்டு பிரதிநிதிகளையும் வர்த்தகர்களையும் அனுப்பி வைத்தோம்.

ஆனால் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்த  மாநாடு மூலம் எங்களுக்க் வர்த்தகம் கிடைக்கவில்லை.   இவ்வாறு இந்த மாநாட்டுக்காக வருடம் 25000 பவுண்டுகள் செலவு செய்வதை விட  வேறு வகையில் செலவு செய்திருந்தால் எங்களுக்கு வர்த்தக வாய்ப்புக்கள் நிறைய கிடைத்திருக்கும்.

அதனால் நாங்கள் பங்குதார நாடாக கலந்துக் கொள்ளப் போவதில்லை.  ஆகவே எங்கள் நாட்டு அமைச்சரவை மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ள மாட்டார்கள் அத்துடன் நாங்கள் இந்த கண்காட்சியிலும் கலந்துக் கொள்ளப் போவதில்லை” என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த மாநாட்டில் அமெரிக்கா பங்குதார நாடாக கலந்துக் கொள்ள மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.