Random image

இங்கிலாந்தில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை தாண்டியது

லண்டன்: 

ங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

தடுப்பூசி திட்டம் நடைமுறைக்கு வர துவங்குவதற்கு முன் மேலும் பல மரணங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புள்ளது என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பிரிட்டனில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் ஜனவரி 5ஆம் தேதி மீண்டும் முழு அடைப்பு துவங்கியது, பொதுமக்கள் அனைவரும் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.