மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநாவுக்கு பிரிட்டன் கோரிக்கை

ண்டன்

ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத தலைவன் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநாசபைக்கு பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 14 ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது புல்வாமாவில் நடத்திய  தீவிரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பல உலகநாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.    இந்த இயக்கத்தின் தலைவனான மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துள்ளதை உலகத் தலைவர்கள் பலர் கண்டித்துள்ளனர்.

பிரான்ஸ் அரசாங்கம் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநா சபைக்கு மனு அளிக்க போவதாக தெரிவித்துள்ளது.   இந்தியாவில் உள்ள அமெரிக்க  தூதரான கென்னத் தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளார்.   நியுஜிலாந்து அரசு இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தானை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது.

தற்போது பிரிட்டன் அரசு ஜெய்ஷ் ஈ முகமது தலைவர் மசூத் அசார் உலக பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்படவேண்டும் என ஐநா சபைக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் இயற்றி உள்ளது.    இந்த தீர்மானத்துக்கு ஐநா சபையில் உள்ள 5 வல்லரசு நாடுகளில் 3 வல்லரசு நாடுகள் ஆதரவு அளீக்க உள்ளதாக கூறப்படுகிறது.

.   ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் உரியில் நடந்த ஜெய்ஷ் ஈ முகமது தாக்குதலின்  போது இத்தைகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வல்லரசு நாடுகள் ஆதரவு இன்மையால் தோல்வி அடைந்துள்ளது.   தற்போது வல்லரசுகள் ஆதரவு உள்ளதாக தெரிய வந்துள்ளது.  இது பாகிஸ்தான் நாட்டுக்கு கடும் பின்னடைவு என ஐநா சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன