உருமாறிய கொரோனா தாக்கம் எதிரொலி: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வருகை ரத்து

டெல்லி: குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதாக இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.

பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு தற்காலிகமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில், பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமது இந்திய பயணத்தை ரத்து செய்து உள்ளதாக  பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

முன்னதாக, குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வருமாறு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று கொண்ட போரிஸ் ஜான்சன், பிரிட்டனில் நடைபெறும் ஜி 7 உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதி இருந்தார்.