பொங்கல் வாழ்த்து தெரிவிக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் – விடியோ

ண்டன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு தங்கள் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் நாளை பொங்கலைக் கொண்டாட உள்ளனர்.  விவசாயத்துக்கு மிகவும் உதவி செய்யும் சூரியனுக்குப் பொங்கலைப் படைத்து நன்றியைத் தெரிவிக்கும் இந்த விழா பல மொழிகளில் இந்தியாவில் கொண்டாடப்பட்டாலும் தமிழகத்துக்கு இது ஒரு முக்கிய விழாவாகும்.

உலகெங்கும் உள்ள பல தலைவர்கள் இதையொட்டி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பொங்கல் வாழ்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர், “நமது பெருமைக்குரிய பிரிட்டிஷ் தமிழர்களுக்கும் உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் நான் தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  பொங்கல் பண்டிகை என்பது பொங்கல் என்னும் சுவையான உணவுக்காக மட்டுமின்றி ஒரு  பெருவிழா என்பதை நான் அறிவேன்.  இதை அனைவரும் விரைவில் கொண்டாட உள்ளீர்கள்.

இந்த விழாவானது அறுவடையை ஒட்டி விவசாயிகள் வழிபாடு செய்யும் திருநாளாக இருந்துள்ளது. ஆனால் நான் இந்த திருநாளை பிரிட்டன் தமிழர்களுடன் இணைந்து கொண்டாட உள்ளேன்.  தமிழர்கள் நமது நாட்டில் வர்த்தகத்தின் மூலம் நமது பொருளாதாரத்தை உயர்த்தி, பள்ளிகளில் பாடங்கள் நடத்தி, நோயாளிகளுக்குச் சேவை செய்து, நமது சமூகத்துக்கு பெரும் பணி ஆற்றி வருகின்றனர். 

உங்களது பங்களிப்பு நாட்டில் ஒரு நல்ல மாறுதலை உண்டாக்கி உள்ளது.  நமது திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்ற தமிழர்களின் சேவை இன்றியமையாததாகும்..   இந்த நாட்டை உலகத் தரத்தில் உயர்த்த தமிழர்களின் ஒவ்வொரு குடும்பமும் பாடுபடுகிறது.  இதற்காகத் தமிழர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பொங்கல் கொண்டாட்ட உள்ளிட்ட அனைத்த்ஜு கொண்டாட்டங்களையும் இன்றும் வரும் நாட்களிலும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துகிறேன்.  உங்களுக்கு மேலும் மேலும் மகிழ்ச்சியும் வளமும் கொண்டாட்டமும் அதிகரிக்கப் பொங்கல் பானையுடன் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.