இங்கிலாந்து: பேங்க் டெபிட் கார்டில் பிரபாகரன் படம்! பரபரப்பு

லன்டன்,

ங்கிலாந்தில் பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில், விடுதலைப்புலி தலைவர்  தலைவர் பிரபாகரன் படம்  பிரின்ட் செய்யப்பட்டிருந்தது. இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இங்கிலாந்தில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் பொறிக்கப்பட்டு வெளியாகியுள்ளது.

இதுகுறித்த படமும் செய்தியும் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  அங்குள்ள பாக்கிளேஸ் பேங்கில், நீங்கள் விரும்பும் புகைப்படத்தைக் கொடுத்து உங்கள் ஏ.டி.எம் கார்டில் பிரின்ட் செய்து கொள்ளும் வசதி உள்ளது..

அந்த வாய்ப்பை பயன்படுத்தி, அங்குள்ள இலங்கை தமிழர்கள் சிலர் இதுபோல, பிரபாகரன் படத்தை கொடுத்து டெபிட் கார்டுகளில் பிரின்ட் செய்து  வாங்கி உள்ளனர்.

இதுகுறித்து, அங்குள்ள தமிழகர்கள் கூறும்போது,  விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை,  பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் இடம் பெற செய்துள்ளது,  தமிழர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.  அந்த வகையில் அங்குள்ள  பெரும்பாலான  தமிழர்கள் பிரபாகரன் படத்தை பிரிண்ட் செய்த டெபிட் கார்டுகளை வைத்திருக்கிறார்கள் என்று கூறினர்.

ஆனால், இதுகுறித்து ஒரு சிலர், எல்டிடிஈ தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறார், இங்கிலாந்தில் வசிக்கிறார்  என்று புரளியை கிளப்பி மேலும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டனர்.