லண்டன்:

ங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகின்190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் மக்களிடைய பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், இங்கிலாந்து நாட்டின் பிரதமருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் பிரதமர் ஒருவருக்கு கொரோனா தொற்று பதவி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இதுதான் முதன்முறை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்தில் மார்ச் 26 வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,658 ஆக உயர்ந்துள்ளது.  மேலும், இந்த வைரஸ் பாதிப்பினால் 578 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை 475 ஆக இருந்த இந்த எண்ணிக்கை திடீரென உயர்ந்திருக்கிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என லண்டன் மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன. தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இங்கிலாந்திலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.