புதிய இந்தியாவை கட்டமைக்கும் மோடிக்கு முழு ஆதரவு: பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன்

புதிய இந்தியாவை கட்டமைக்க பிரதமர் மோடிக்கு தாம் முழு ஆதரவு அளிப்பதாக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களின் ஆதரவை பெறும் நோக்கில், அங்குள்ள சுவாமி நாராயண் கோயிலுக்கு போரீஸ் ஜான்சனும், அவரது மனைவி கேரி சைமன்ட்சும் சென்றனர்.

அப்போது பேசிய போரீஸ் ஜான்சன், ”புதிய இந்தியாவை அந்நாட்டின் பிரதமர் மோடி கட்டமைத்து வருகிறார். அது எனக்கு தெரியும். இந்திய பிரதமரின் இம்முயற்சிக்கு, பிரிட்டனில் ஆட்சியில் இருக்கும் எனது தலைமையிலான அரசு முழுமையாக ஆதரவு அளிக்கும். காஷ்மீர் விவகாரத்தில் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி இந்தியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்துள்ளது. ஆனால் எனது அரசு இந்தியாவுக்கு எதிராக எந்த நிலைபாட்டையும் எடுக்காது. அதற்கு இடமில்லை” என்று தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Boris Johnson, Brittain, election, narendra modi, New India, PM
-=-