பெண்களை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பாடகர் ஆன்டி அனோகிக்கு 24 ஆண்டுகள் சிறை….!

இங்கிலாந்த் வடக்கு லண்டனில் டோட்டன்ஹாம் பகுதியில் வளர்ந்தவர் பாடகரான ஆன்டி அனோகி(33). அவர் பிரிஸ்டலில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். பாய் பெட்டர் நோ இசைக்குழுவில் இருந்தவர் ஆன்டி.

அவர் நான்கு பெண்களை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

பெண்களை மிரட்டிப் பார்க்க தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஆன்டி நீமன்றத்தில் கூறியுள்ளார் .ஆனால் பலாத்கார விளையாட்டில் அந்த பெண்கள் விரும்பியே பங்கேற்றார்கள் என்று ஆன்டி நீதிபதியிடம் கூறினார்.

ஆன்டி வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியம் ஹார்ட் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆன்டிக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார் .

கார்ட்டூன் கேலரி