இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் புதிய குழந்தை புகைப்படம் வெளியீடு

லண்டன்:

இங்கிலாந்து மன்னர் குடும்பத்தில் பிறந்த புதிய வாரிசின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் கேத்தரின் தம்பதியருக்கு புதிதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. புதிய குழந்தைக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த குழந்தையிந் புகைப்படம் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில் குழந்தையின் புகைப்படத்தை கேன்சிங்கடன் அரண்மனை இன்று வெளியிட்டுள்ளது. புகைப்படத்தில் குழந்தையின் சகோதரி சார்லோட் குழந்தையை கொஞ்சும் காட்சி இடம்பெற்றுள்ளது.