பீஜிங்: உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றை பரப்பிய சீனாவில், தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் கடந்த 2019–ம் ஆண்டு டிசம்பர் 18–ம் தேதி முதன்முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்குள்ள விலங்குகளில் இருந்து பரவியதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து, அந்த வைரஸ் உலகின் அனைத்து கண்டங்களிலும் பரவிய நிலையில், சீனால் கட்டுப்படுத்தப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வைரஸ் தொற்று பரவல் தொடங்கி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், தற்போது புதிய வகையிலான உருமாறிய கொரோனா வைரஸ் லண்டனில் இருந்து பரவி வருவது தெரிய வந்துள்ளது.  இந்த நிலையில், உருமாறிய கொரோனா வைரஸ் சீனாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து திரும்பிய ஷன்ஹாய் நகரைச் சேர்ந்த 23 வயது மாணவிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டு சுகாதாரத்துறையால் மாணவி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிப்படுத்தும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று 25 பேருக்கு மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் மொத்தம் இதுவரை 87 ஆயிரத்து 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.