தகவல் திருட்டு: பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.4.70 கோடி அபராதம்! இங்கிலாந்து அதிரடி

பிரபல சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்த நாட்டின் தகவல் ஆணையம்  5 லட்சம் பவுண்ட்ஸ் ( இந்தியா ரூபாயில் 4.70 கோடி) அபராதம் வித்து உள்ளது.

பேஸ்புக் தகவல்கள் திருடப்பட்டு சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில், பேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து இந்த அபராதத்தை விதித்து உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த தகவல் திருட்டு கடந்த  2007-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை சுமார் 7 ஆண்டுகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பேஸ்புக் இணையதளம் பாதுகாப்பின்மை என்று குற்றம் சாட்டப்பட்டது. அதை பேஸ்புக் நிறுவனமும் ஒத்துக்கொண்டது.

இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் மீது இங்கிலாந்து தகவல் ஆணையத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.  அதைத்தொடர்ந்து, பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பான குற்றத்துக்கு  4.70 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.