நாட்டிங்காம், இங்கிலாந்து

ரு இங்கிலாந்துப் பெண் தனது வீட்டில் முட்டை உடைந்ததால் உதவி கேட்டு ஆம்புலன்ஸ் சேவையை அணுகி உள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் ஆம்புலன்ஸ் சேவைக்கான எண் 999 ஆகும்.   இந்த உதவிக்கு தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் வருவதாக  இந்த சேவை மையம் தெரிவித்து உள்ளது.    இந்த செய்திகள் போலியானவை எனப் பலர் கருதுவதால் தற்போது நாட்டிங்காம் பகுதியில் உள்ள ஆம்புலன்ஸ் சேவைக்கு வந்த ஒரு அழைப்பின் ஒலிப்பதிவை வெளியிட்டுள்ளனர்.

அந்த அழைப்பில் அவர், “நான் எனது குளிர்பதனப் பெட்டியில் (ஃப்ரிட்ஜ்) ஒரு பெட்டி நிறைய முட்டைகள் வைத்திருந்தேன்.  அதில் ஒரு முட்டை உடைந்து விட்டதால் மற்ற முட்டைகளை அந்த முட்டைப் பெட்டியின் மூடியில் வைத்துள்ளேன்.   அதனால் அந்த பெட்டி திறந்த நிலையில் உள்ளது.    இந்த முட்டைகளை மீண்டும் அந்தப் பெட்டியில் வைக்க உதவ முடியுமா?” எனக் கேட்டுள்ளார்.

இந்தப் வெளியிட்ட அந்த சேவை மையம்  மக்களுக்கு தேவை இல்லாமல் இந்த சேவைக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.     இந்த ஒலிப்பதிவை கேட்ட 91000  பேர் அந்தப் பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.   அத்துடன் இந்த ஒலிப்பதிவை முகநூலில் ஆயிரக்கணக்கானோர் பதிந்துள்ளனர்.    அதற்கு பலர், “இந்த பெண் செய்தது சரியான முட்டாள் தனம் ஆகும் இவ்வாறு செய்பவர்களுக்கு அரசு அபராதம் விதிக்க வேண்டும்”  என பின்னூட்டம் இட்டுள்ளனர்.