கீவ்:

உக்ரைன் அதிபராக அந்நாட்டின் நகைச்சுவை நடிகர் வோலாடிமீர் ஜெலன்ஸ்கி திங்களன்று பதவியேற்றார்.


கடந்த வாரம் உக்ரைனில் நடந்த அதிபர் தேர்தலில் வோலாடிமீர் ஜெலன்ஸ்கி வெற்றி பெற்றார்.
பதவியேற்றதும் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அவர் அறிவித்தார்.

உக்ரைனில் அதிபர் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் தனித்தனியாக நடக்கும்.

புதிய கட்சி தொடங்கியுள்ள வோலாடிமீர் ஜெலன்ஸ்கி ஆதரவாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியேற்றதும் என் முதல் பணி கிழக்கு உக்ரைனில் அமைதி ஏற்படுத்துவதே என்று தெரிவித்த வோலாடிமீர் ஜெலன்ஸ்கி, எல்லையிலிருந்து வெளியேறினால் மட்டுமே ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றார்.

41 வயதான தொலைக்காட்சி நடிகரான வோலாடிமீர் ஜெலன்ஸ்கிக்கு அரசியல் அனுபவம் ஏதும் இல்லை. எனினும் அதிபர் தேர்தலில் 73% பெற்று வெற்றி பெற்றார்.

2 முறை தொடர்ந்து வெற்றி பெற்று அதிபராக இருந்த பெட்ரோ போரோஷெங்கோ, வெறும் 25% வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

அவர் நடித்த பீப்பிள் ஆஃப் தி சர்வென்ட் என்ற தொலைக்காட்சி நாடகத்தில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்த அவர், பின்னர் எதிர்பாராதவிதமாக அதிபராவதாக கதைக்களம் இருக்கும்.

அந்த கதையை வோலாடிமீர் ஜெலன்ஸ்கி உண்மையாகவே நிரூபித்து விட்டார்.