நான்கு வயது மகளை பலாத்காரம் செய்து விடியோ எடுத்த பெற்றோர்

 

உக்ரைன்

உக்ரைனை சேர்ந்த தம்பதியர் தங்களின் நான்கு வயது மகளை பலாத்காரம் அதை வீடியோ படமாக்கி விற்பனை செய்துள்ளனர்.

ஆஸ்திரேலிய காவல்துறையினர் ஒரு பாலியல் வீடியோ பலராலும் பகிரப்படுவதை கண்காணித்துள்ளனர்.    அந்த வீடியோவில் ஒரு நான்கு வயது சிறுமி பலாத்காரம்  அவளுடைய பெற்றோர்களால் பலாத்காரம் செய்வதாக அமைக்கப்பட்டிருந்தது.    இதே பாணியில் அவர்களுடைய வேறு பல வீடியோக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய காவல்துறையினர் ஆய்வு செய்ததில் ஒரு வீடியோவில் ஒரு பொருளின் பார்கோடு எனப்படும் விலைச் சீட்டு காணப்பட்டது.   அதைக் கொண்டு ஆராய்ந்ததில் அது உக்ரைன் நாட்டை சேர்ந்தது என கண்டறியப்பட்டது.   அவர்கள் உக்ரைன் காவல்துறையினரை தொடர்பு கொண்டுள்ளனர்.    முதலில் அதிகம் சுவாரசியம் காட்டாத உக்ரைன் காவல்துறை ஆஸ்திரேலியாவின் வற்புறுத்தலுக்குப் பின் முழு மூச்சில் விசாரணையில் இறங்கியது.

விசாரணையில் அந்த தம்பதிகள் உக்ரைனை சேர்ந்த ஆண் என்பதும் அசெர்பஜானியை சேர்ந்த பெண் என்பதும் தெரிய வந்துள்ளது,   உறவினர்களான இந்த கணவனும் மனைவியும் தங்கள் 4 வயது மகளுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து விற்பனை செய்துள்ளனர்.   ஒரு சில மக்களுக்கு குழந்தைகள் பாலியல் வீடியோ மீது விருப்பம் அதிகம் இருக்கும்.   அவர்கள் இந்த வீடியோக்களை விலைக்கு வாங்கி உள்ளனர்.  இந்த வீடியோக்கள் ஆஸ்திரேலியாவில் மட்டுமின்றி ஆசியாவிலும் விற்கப்பட்டுள்ளன.

காவல்துறையினர் அவர்கள் வீட்டுக்கு சென்றபோது தனக்கு நடந்த கொடுமை புரியாமல் அந்தக் குழந்தை தாயின் மடியில்  அமர்ந்திருந்தது.  விசாரணையில் அந்த பெற்றோர் தங்கள் மகளிடம் அவளுடைய இரண்டாம் வயதில் இருந்தே இவ்வாறு நடந்து வீடியோ எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.    அந்தக் குழந்தையை மீட்டு தற்போது காப்பகத்தில் வைத்துள்ளனர்.   பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து உக்ரைன் காவல்துறை தலைவர், “ஒரு பெண் தனது மகளிடம் இவ்வாறு நடந்துக் கொண்டுள்ள போது அவளை தாய் என கூற முடியாது.   அந்தப் பெண் ஒரு பேய், மிருகம், ராட்சசி என எப்படியும் கூறலாம்.   அந்தக் குழந்தையிடம் அந்த ராட்சசி நடந்துக் கொண்டதை குறித்துப் பேச ஆணான எனக்கே சங்கடமாக உள்ளது.   இனி அந்தக் குழந்தை பெற்றோர்களிடம் திருப்பி அனுப்பப் பட மாட்டாது.   இது போல ஒரு நான்கு வயது குழந்தை பெற்றோரால் நடத்தப் படுவதை கேட்டதும் நான் காவலர்களிடம் மற்ற வேலைகளை நிறுத்தி விட்டு அந்தக் குழந்தையை உடனடியாக மீட்கச் சொன்னேன்” என தெரிவித்துள்ளார்