க்ரைன்

க்ரைன் நாட்டில் குழந்தைகளை பாலியல் கொடுமை செய்தல் மற்றும் பலாத்கார குற்றங்களுக்கு ஊசி மூலமாக ஆண்மை நீக்க தண்டனை வழங்கச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது

உக்ரைன் நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மிகவும் அதிகரித்து வருகிறது.   அத்துடன் பலாத்கார குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.    இதைத தடுக்க 12 வருடச் சிறை தண்டனை 15 வருடமாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.  ஆயினும் இத்தகையை குற்றங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

மேலும் உக்ரைன் நாட்டு சட்டப்படி மரணதண்டனை மற்றும் ஆயுள்தண்டனை அளிப்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.  எனவே சிறை தண்டனை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.   இவ்வாறு சிரை சென்றவர்கள் சிறையில் இருந்து திரும்பியதும் மீண்டும் அத்தகைய குற்றங்களைச் செய்வது வாடிக்கையாகி உள்ளது.

இதையொட்டி உக்ரைன் நாட்டில் தற்போது சட்டம் திருத்தப்பட்டுள்ளது.   அதன்படி குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை செய்பவர்களுக்கும் பலாத்கார குற்றம் செய்பவர்களுக்கும் ரசாயன முறையில்  ஆண்மை நீக்கத் தண்டனை வழங்கப்பட உள்ளது.  இம்முறையில் அறுவை சிகிச்சை இன்றி ஆண்மைத் தன்மை நீக்கப்படும்.

இந்த தண்டனை 18 வயது முதல் 65 வயது வரை உள்ள இத்தகைய குற்றவாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.  இதன்படி இவர்களுக்கு வலுக்கட்டாயமாக ரசாயனம் கலந்த ஆண்மைத் தன்மையை நீக்கும் மருந்துகள் ஊசி மூலமாக செலுத்தப்பட உள்ளது.  இந்த் தண்டனை குழந்தைகள் மீது வன்முறைக் கொடுமை செய்வோர், மற்றும் இயற்கைக்கு மாறான பலாத்கார குற்றம் செய்வோருக்கு வழங்கப்பட உள்ளது.