உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா…

விழுப்புரம்:
ளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதி உச்சமடைந்துள்ளது. இதன் பாதிப்புக்கு சாமானிய மக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்ட்டு வருகின்றனர்.
ஏற்கனவே  அதிமுக அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல, அதிமுக  எம்.எல்.ஏ .பழனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதியானது. பின்னர், பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சதன் பிரபாகரன்  மற்றும் அவரது குடும்பத்தினரும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில்,  உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி