லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடைபெற்ற பாலியல் வன்முறைகள், அம்மாநில பாரதீய ஜனதா முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பெயருக்கும், கட்சியின் பெயருக்கும் பெரிய களங்கம் விளைவித்திருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார் மூத்த பா.ஜ. தலைவர் உமா பாரதி.
சம்பந்தப்பட்ட பகுதிக்குள் மீடியாக்களையோ, இதர கட்சிகளின் அரசியல் தலைவர்களையோ உள்ளேவிட மறுக்கிறது மாநில நிர்வாகம் மற்றும் அப்பகுதியிலிருந்து யாரும் வெளியேறவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
“நாம் ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை இப்போதுதான் நாட்டியுள்ளோம் மற்றும் ராம் ராஜ்யத்தை நாடெங்கிலும் அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியையும் மக்களிடம் வழங்கியுள்ளோம்.
ஆனால், ஹத்ராஸ் விஷயத்தில் உத்திரப்பிரதேச காவல்துறை நடந்துகொள்ளும் விதத்தால், உங்களுக்கும்(யோகி) கட்சிக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.
நீங்கள் ஒரு நல்ல மதிப்புவாய்ந்த மனிதர். எனவே, பாதிக்கப்பட்ட பகுதிக்குள் மீடியாக்களை அனுமதித்து, பாதிக்கப்பட்டவர்களை, இதர அரசியல் தலைவர்கள் பார்வையிடுவதற்கும் அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றுள்ளார் உமா பாரதி.
இவர் பாரதீய ஜனதா சார்பில், மத்தியப் பிரதேச முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர்.