மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பாத மத்திய அமைச்சர் யார் தெரியுமா?

ஜான்சி

மூத்த பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான உமா பாரதி தான் இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது ஜான்சி நகரம்,   இது சரித்திரப் புகழ் வாழ்ந்த நகரங்களில் ஒன்றாகும்.    நேற்று ஜான்சி நகரில் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான உமாபாரதி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது உமா பாரதி, “நான் இருமுறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.    கட்சிக்காக மிகவும் தொண்டாற்றி உள்ளேன்.  தற்போது எனது வயது காரணமாக முதுகு வலியாலும், முழங்கால் வலியாலும் அவதிப் படுகிறேன்.

அதனால் நான் வரும் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்.   அதே நேரத்தில் நான் கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன்   அதில் எந்த வித மாற்றமும் இல்லை”  எனக் கூறினார்.