மத்திய பாஜக பெண் அமைச்சர் மருத்துவமனையில் திடீர் அனுமதி

டில்லி

த்திய அமைச்சர் உமாபாரதி கடுமையான மூட்டுவலி காரணமாக டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மத்திய அரசின் குடிநீர் மற்றும் துப்புறவுட்துறை அமைச்சராக பாஜகவின் உமாபாரதி பதிவி வகித்து வருகிறார்.     இவர் திடீரென டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக செய்திகள் வந்தன.    இதனால் பாஜக வட்டாரத்தில் கடும் பரபரப்பு உண்டகியது.

அவருடைய உறவினர் ஒருவர் இது குறித்து, “உமாபாரதிக்கு  கடந்த சில ஆண்டுகளாகவே மூட்டு வலி இருந்து வருகிறது.   நேற்று இரவு அவருக்கு வலி கடுமையாகி மிகவும் கதற ஆரம்பித்து விட்டார்.   அதனால் அவரை உடனடியாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்.

தற்போது அவர் நல்ல உடல் நிலையில் உள்ளார்.   முட்டுவலியைப்  போக்க அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.    பயப்படும் படியாக ஒன்றும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறி உள்ளனர்”  என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

You may have missed