150 படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய ஜி.ஜெயச்சந்திரன் மரணம்..

மிழில் ஆபாவாணன் தயாரித்த விஜயகாந்த் நடித்த ‘ஊமைவிழிகள்’ படத்தில் எடிட்டராக அறிமுகமானவர் ஜி.ஜெயச்சந்திரன். அதன்பிறகு பல்வேறு வெற்றிப் படங்களுக்கு பணியாற்றிய துடன் சுமார் 150 படங் களுக்கு பணி யாற்றி உள்ளார். இவர் சில படங்களும் தயாரித்திருக்கிறார்.
இன்று காலை ஜி.ஜெயச்சந்திரனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அதில் மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 58. இவர் பழம்பெரும் எடிட்டர் வி.கோவிந்தசாமி யின்மகன் ஆவார்.