நெல்லை:

அரசியலுக்காகவே உமாமகேஸ்வரியை கொலை செய்தோம் என்றும், கைது செய்யப்பட்டுள்ள மதுரை தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நெல்லை மாநகராட்சி முன்னாள் பெண் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண்  உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரையை சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின்  மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 23-ந் தேதி  தமிழகத்தின் முதல் பெண் மேயலும், நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வேலைக்கார பெண் மாரியம்மாள் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. உமா மகேஸ்வரி அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்த நிலையில், கைக்காக கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததது.

இது தொடர்பாக  போலீசார் தனிப்படை அமைத்து  தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில், உமாமகேஸ்வரி கொலைக்கு  தி.மு.க.வை சேர்ந்த பெண் பிரமுகரான சீனியம்மாள் காரணம் என தகவல்கள் வெளியானது. ஆனால், அவர், தனக்கும், இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று மறுத்து வந்தார்.

இந்த நிலையில்,  கொலை நடந்த அன்று அந்த பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான அழைப்புகளை ஆய்வு செய்த காவல்துறையினர்,  உமா மகேஸ்வரியின் வீட்டருகே உள்ள ஒரு ஓட்டலில் பதிவான காமிரா காட்சிகள், அருகே உள்ள   கிறிஸ்தவ தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த காமதிரா பதிவுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக சிலமுறை சென்று வந்த கார் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த  மதுரை,  தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகனான கார்த்திகேயனுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து விசாரணை மேலும் தீவிரமானது. இதுகுறித்து மோப்பம் பிடித்த கார்த்திகேயன், திடீரென மாயமாக,  கார்த்திகேயனை காவல்துறையினல் சல்லடை போட்டு தேடி வந்த நிலையில், மதுரையில் பதுங்கி இருந்தவரை காவல்துறையினர்  சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து,  நெல்லை கொண்டு வரப்பட்ட கார்த்திகேயனிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  உமா மகேஸ்வரி உள்பட 3 பேரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அவர் கொடுத்த தகவல்படி  3 பேர் கொலைக்கு பயன்படுத்தபட்ட ஆயுதங்கள் செங்குளம் அருகே புதுகுளத்தில் தனிப்படை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கொலை திமுகவில் நடைபெற்ற உள்கட்சி மோதல் காரணமாகவே நடந்திருப்பது வெட்ட வெளிச்சமானது. தனது தாயாரின் அரசியல் வாழ்க்கை தோல்வி அடைந்ததற்கு உமா மகேஸ்வரிதான் காரணம் என்பதால், அவரை கொலை செய்ததாக கார்த்திகேயன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் தூத்துக்குடியில் திமுக பிரமுகர் ஒருவர், அதே திமுக கட்சி பிரமுகரால் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், நெல்லை முன்னாள் மேயரில் கொலையும் கட்சிப்பதவிக்காக கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.