Random image

மனித உரிமை ஆர்வலர்களை தண்டிக்கும் இந்தியா : ஐ நா கண்டனம்

ஜெனிவா

னித உரிமை ஆர்வலர்கள் தண்டிக்கப்படுவதாக ஐ நா அறிவித்த 38 நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

மனித உரிமை குறித்த வருடாந்திர ஐநா சபை கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்றது.   இந்த கூட்டத்துக்கு ஐநா சபையின் பொதுச் செயலர் அண்டோனியோ கட்டர்ஸ் தலைமை தாங்கி நடத்தினார்.  உலகின் அனைத்து நாடுகளிலும் பதியப்பட்டுள்ள மற்றும் நடந்து வரும் மனித உரிமை மீறல் குறித்த வழக்குகள் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இந்த ஆராய்ச்சி முடிவில், “மனித உரிமைக்காக போராடும் ஆர்வலர்களுக்கு உலக நாடுகள் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  அவர்களால்தான் ஐநா சபைக்கு உலகெங்கும் நடக்கும் மனித உரிமை மீறல் குறித்த தகவல்கள் வருகின்றன.    இவ்வாறு மனித உரிமை மீறலை சுட்டுக் காட்டுபவர்களை தண்டனைக்குள்ளாக்கும் அவமானகரமான செயலை பல உலகநாடுகள் செய்து வருகின்றன.

இவ்வாறு மனித உரிமை ஆர்வலர்களை தண்டிப்பதை உலகெங்கும் 38 நாடுகள் செய்து வருகின்றன.    இதில் ஏற்கனவே 19 நாடுகளில் பழைய வழக்குகள் உள்ளன.   புதியதாக வழக்குகள் இந்தியா, சீனா, காமரூன், பஹரைன், கொலம்பியா, க்யூபா, காங்கோ, ஹங்கேரி, ரஷ்யா, சௌதி அரேபியா, தாய்லாந்து, உள்ளிட்ட 29 நாடுகளில் பதியப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.