காஷ்மீர் தீர்வு : ஐ நா தலைவர் மும்முரம்

நியூயார்க்

நா சபைத்தலைவர் அண்டோனியா குட்டெரஸ் காஷ்மீர் விவகாரத்த்துக்கு தீர்வு காண இந்தியா – பாக் இடையே பேச்சு வார்த்தை நடத்த வைக்க தாம் முனந்துள்ளதாக கூறியுள்ளார்.

நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் நேர்க்காணலில் குட்டெரஸ் கூறியதாவது :

”காஷ்மீர் பிரச்னையை நான் வெகுநாட்களாக கூர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறேன்   இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை நடத்தினால் நிச்சயம் ஒரு சுமுக தீர்வு ஏற்படும் என நான் நம்புகிறேன்.  இதற்க்காக நான் இதுவரை இந்தியப் பிரதமரை மூன்று முறையும், பாக் பிரதமரை இரண்டு முறையும் சந்தித்துப் பேசியுள்ளேன்.  விரைவில் சுமுக தீர்வு எட்டப்படும்”

இவ்வாறு குட்டெரஸ் கூறினார்.

காஷ்மீர் பிரச்னையில் சர்வதேச அமைப்புகள் தலையிட்டு தீர்வு காண உதவ வேண்டும் என பாகிஸ்தானும்,  இது இரு நாடுகளும் கூடிப் பேசி தீர்வு காண வேண்டிய பிரச்னை என இந்தியாவும் கருத்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது