வாஷிங்டன்

நா பாதுகாப்பு குழு பாகிஸ்தான் தீவிரவாதியான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது பொறுப்பு ஏற்றது. உலக நாடுகள் பலவும் அந்த இயக்க தலைவன் மசூத் அசாருக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பல தீவிரவாத தாக்குதல்களை நடத்தி உள்ளது. அதனால் ஐநா பாதுகாப்பு சபையிடம் இந்தியா மற்ற நாடுகள் சார்பில் கோரிக்கை ஒன்றை அளித்தது. அந்த கோரிக்கையில் ஜெய்ஷ் ஈ முகது தீவிரவாத இயக்க தலைவன் மசூத் அசார் சர்வதேச பயங்கர வாதியாக அறிவிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இவ்வாறு ஏற்கனவே இரு முறை அளித்த கோரிக்கைகள் சீனாவின் ஒப்புதல் இல்லாததால் நிறைவேற்றப்பட முடியாமல் போனது.  தற்போது சீனா இந்த கோரிக்கைக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. சமீபத்தில் தனது எதிர்ப்பை சீனா விலக்கிக் கொண்டதால் ஐநா பாதுகாப்பு குழு மசூத் அசார் ஒரு சர்வதேச பயங்கரவாதி என அறிவித்துள்ளது.