ஜெனிவா:
க்கிய நாடுகள் சபையுடன் பணிபுரியும் சுயாதீன மனித உரிமை நிபுணர் ஒருவர், மியான்மரில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சியின் ஆதரவாளர்களை துன்புறுத்துவதை நிறுத்துமாறு மியான்மர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மியான்மரில் ஐநாவின் சிறப்பு புலனாய்வாளராக இருக்கும், முன்னால் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினரான தாமஸ் ஆண்ட்ரூஸ், மியான்மரில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும், மற்றவர்களுக்கும் இனம் அல்லது மதத்தின் அடிப்படையில் வாக்களிப்பு மறுக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

1861 ஆம் ஆண்டில் காலனித்துவ பிரிட்டனின் கீழ் அமைக்கப்பட்ட தண்டனை குறியீட்டை மியான்மர் ராணுவம் மீண்டும் பயன்படுத்துவதாக எனக்கு தோன்றுகிறது, மேலும் இங்கு இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் பல குழுக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2015 ஆம் ஆண்டு கடைசி பொதுத்தேர்தலில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூகி மற்றும் அவரது அரசாங்கம் ரோஹிங்கியா சிறுபான்மையினரை துஷ்பிரயோகம் செய்ய பாதுகாப்பு படையினரை அனுமதித்தனர், அதற்காக சர்வதேச கண்டனத்தை அவர்கள் எதிர்கொண்டனர், மீண்டும் இங்கு அது போலான ஒரு சூழ்நிலை உருவாக கூடாது என்று தாமஸ் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.